Thursday, January 21, 2010

பசுமை நினைவுகள்

நுங்கு மட்டையில் வண்டி ஓட்டியது
ஈச்ச மரத்தில் ஏறி காயமடைந்தது
தண்டவாளத்தில் காது வைத்து படுத்தது
புளியமர நிழலில் கோலி விளையாடியது
கிணற்றடியில் துணி துவைத்துக் குளித்தது
ஊஞ்சலில் விளையாட சண்டைபோட்டது
குட்டையில் கும்பலாக குளித்தது
திருவிழாவில் தாமரை இலையில் சாப்பிட்டது
பாலைஸ் (பால்-ஐஸ்) எனக்கு உனக்கு என சண்டையிட்டது
பாட்டிக் கையால் வைத்த சாம்பாரை சுவைத்தது
தாத்தா கைப்பிடித்து கோவிலுக்கு சென்றது
தாதா vs பாட்டி குறும்புச் சண்டை
தாத்தாவிடம் கற்ற reef-knot தந்திரம்
நண்பர்களுடன் ஏழு-கல் விளையாடியது
திண்ணையில் கூட்டமாக தூங்கிப் புரண்டது

இதைப்போல் ஏராளமாக...
அதற்க்கு பல பக்கங்கள் வேண்டும்...
ஆகவே இவற்றுடன் விடைபெறுகிறேன்.!!!

இவன்
-நா. இரவி ஷங்கர்.

Wednesday, January 6, 2010

உறவுகள் Vs நண்பர்கள்?

உறவினன்:-
உன்னுடன் உண்டு (அவன்) மகிழ
உல்லாசமாய் (அவன்) வாழ்ந்திட
(நீ)உருக உரையாடிட
அவ்வப்போது பச்சோந்தியாய் உருமாரிட
உன்னை ஊருடன் ஒத்தி வாழ்வென்பான்....ஆனால்
உதவி என்றவுடன் உன் ஊர் யாதரியாதென்பான்.


உண்மை நண்பன்:-
பிரதிபலன் ஏதும் எதிர்பாராத
கானல் கண்ணீர் சுரக்காத
உன் துக்கத்தை என்றும் பகிர்ந்திட
ஏதும் கேட்காமல் உற்ற சமயத்தில் உதவிட
நான்கு தூண்களில் ஒன்றாக நின்றிட (இறுதிப் பயணத்தின்பொழுது)
இறுதிவரை உன்னுடன் உண்மையாக
உறுதியுடன் உன்கை போலிருப்பான்.


பி.கு:-
நீ இறந்த பிறகு உன்னை பிணமென்பான் உறவினன்,
அப்பொழுதும் உன்னை தன் நண்பனென்பான் நண்பன்.


-இவன்
நா. இரவி ஷங்கர்.

Tuesday, January 5, 2010

நான் எங்கே?

என் சகோதரன் அழுதான், அவனுக்கு தருவதாக கூறி தராமல் சென்றதுக்காக (பணம்).

என் சகோதரி அழுதாள், இனி அவள் எங்கே சென்று முறையிடுவாளென (சோகத்தை).

என் தாய் தந்தை அழுதார்கள், இனி அவர்களின் நிலையை எண்ணி (வருங்காலத்தை).

என் குழந்தைகள் அழுதார்கள், இனி எங்களுக்கு யார் வாங்கித்தருவார்கள் என்று (பொருட்கள்).

என் உறவினர் சிலர் அழுதனர், இனி இவனுக்கு திருப்பித் தரவேண்டியதில்லை என்று (கடனை - சந்தோஷத்தில்)

என் மனைவி அழுதாள், என்னால் துயர்துடைக்க இயலவில்லை...!!!
ஆறுதல் கூறவும் முடியவில்லை...!!!

ஏனெனில் நான் அனைவரின் மத்தியில் சவப்பெட்டியினுள்.


-இவன்
நா. இரவி ஷங்கர்.