Monday, December 14, 2009

யார் இவன்?

...
இவன் சென்றடையாத மனிதர்களே இல்லை
இவன் வரும் வரை அனைவருக்குமே சந்தோஷம் தான்
இவன் வந்த பின்னர் தான் நம்மிடம் இருந்தவற்றின் பெருமைகள் நன்கு தெரியவரும்
இவன், என்றாவது ஒரு நாள் ஒவ்வரின் வாழ்க்கையிலும் வருவது உறுதி
இவன் சிலரது வாழ்க்கையில் பல நாட்கள் இருப்பதும் உண்டு
இவன் பலரது வாழ்க்கையில் சில நாட்கள் இருப்பதும் உண்டு

இவன் சிலரது வாழ்க்கையில் கண்ணீரை விட்டுச்செல்வான்
இவன் பலரது வாழ்க்கையில் அழியா தடத்தையும் விட்டுச் செல்வான்

சனி மகாதிசையையும் தெரிந்துக் கொள்ளலாம்,
அனால் இவன் வரும் திசையை யாராலும் யூகிக்க முடியாது.

இவன் இவன் இவன்...யார் இவன்?
... ... ... நம் வாசலருகே காத்திருக்கும் "பிரிவு" தான் இவன் ... ... ...

Saturday, October 31, 2009

சுனாமி - பேரலை.

குளமாக ஒரு சிறிய எல்லைக்குள் இருந்தேன்
ஆறாக மாறி இவ்வுலகை பார்க்க ஆரம்பித்தேன்
இறுதியில் உன்னிடத்தில் சங்கமம் ஆனேன்

இப்பொழுது உன் நினைவெனும் சுனாமி என்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது
என்னை கரை சேர்க்க உன் கரம் தருவாயா?

-இப்படிக்கு
உன் காதலன்.



படித்ததில் - மனதில் நின்றவை
==============================

காதலிக்க சொன்னால் முறைத்தாய்...!!!!
முறைக்க சொன்னால் காதலிப்பாயோ...!!!



-இவன்
நா. இரவி ஷங்கர்

Tuesday, October 27, 2009

நினைவுகள்

நிழலும் தொடர்வதை நிறுத்திவிடும் சூரியன் அஸ்த்தமனத்திற்குப் பிறகு
வாசம் தொடர்வதும் நின்றுவிடும் மலர் வாடிய பிறகு

அலைகள் ஒன்றை ஒன்று தொடர்வதை நிறுத்திவிடும் கரையை அடைந்தப் பிறகு
மூச்சுத் தொடர்வதும் நின்றுவிடும் ஆன்மா சென்ற பிறகு

பிறை நிலவும் வளர்வதை நிறுத்திவிடும் முழு நிலவானப் பிறகு
மெகா-சீரியல் தொடர்வதும் நின்றுவிடும் சில வருடங்களுக்குப் பிறகு

அதுபோல் ... ... ...

என் நினைவுகள் உன்னைத் தொடர்வதை நிறுத்திவிடும் உன் கடைப்பார்வைக்குப் பிறகு.


பி.கு: இது மலரும் நினைவுகள் அல்ல உன்னைத் தொடரும் நினைவுகள்...!!!


-இவன்
நா. இரவி ஷங்கர்.

Sunday, October 25, 2009

விழிகள்

என் விழிகள் உறங்கியும் உன் விழிகள் உறங்கவில்லை
நீ உறங்கினாலும் உன்னக விழிகளால் என்னை தாலாட்டிக் கொண்டிருப்பாய்

எத்துனை பேர் இருந்தாலும் உன் விழிகளால் எனக்கு பாடம் கற்பிப்பாய்
நீ பேசிய நேரத்தை விட உன் விழிகளால் பேசிய நேரமதிகம்

நம் விழிகள் ஒன்ருரகலந்து வாழ்க்கை என்ற ஒரே பார்வையாக மாறி
இனிதே திறப்போம் விழிகளை!!!

-இவன்
நா. இரவி ஷங்கர்

Saturday, October 24, 2009

நான் யார்

உந்தன் சந்தோஷத்தை என்னிடம் பகிர்ந்தாய்,
எந்தன் சோகத்தை என்னிடமிருந்து பகிர்ந்தாய்,
நான் தலை சாய உன் தோள்களை பகிர்ந்தாய்,

சரிவிலிருந்து நீ என்னை மேலே எழச்செய்தாய்,
எப்பொழுதும் நீ என்னை விழித்திருக்கச்செய்தாய்,
சமூகத்தில் என்னை ஒரு நல்ல நிலைக்கு வரச்செய்தாய்,

இப்படி இத்தனை "தாய்"-ஆக மாறி, எல்லாமும் ஆனாய் நீ எனக்கு...

நான் உனக்கு நண்பனா? இல்லை ...!!!
நான் உனக்கு காதலனா? இல்லை ...!!!
நான் உனக்கு கணவனா???

நான் காதலனாகவும்
ஒரு கணவனாகவும் பின்னர்
ஒரு நல்ல நண்பனைப் போல்
உன் வாழ்நாள் முழுவதும் உன்னுடன் தொடரவும்
உன்னுடன் வாழத்துடிக்கும்
உன்னுள் நானாகி உன்னுடன் இணைய நினைக்கும்.

- உன் காதலன்.

-இவன்
நா. இரவி ஷங்கர்

Tuesday, October 20, 2009

ஆசை

மடி மீது உறங்க ஆசை!
உன் மடி மீது உறங்க ஆசை!!

உன்னில் என்னை கண்ட நாள் முதல்
உன் மடி மீது உறங்க ஆசை!!!

உன் கண்கள் கதைகள் சொல்ல அதை நான் பார்த்துக்கொண்டே
உன் மடி மீது உறங்க ஆசை!!

உன் கொஞ்சும் பேச்சைக் கேட்டுக்கொண்டே
உன் மடி மீது உறங்க ஆசை!!

சில Sweet வில்லன்களால் ...
என்னில் உன்னை காண்பிக்கவோ !
என் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவோ முடியவில்லை !!

ஏன் என்றால் நான் இங்கு "Onsite" - ல் !
நீ அங்கு தாய் மண்ணில் !!

-இவன்
நா. இரவி ஷங்கர்