Monday, March 30, 2015

இரு கை கூப்பி வணக்கம் என்றேன்
சில வினாடிகள் ஒரு பதிலும் இல்லை
சார் நீங்க ... நீங்க ... நீ .... டேய் நீ அவன்தானே என்றார்
அந்த நிமிடம் பெறு மகிழ்ச்சி அடைந்தேன்
அழுதிருப்பேன் ஆனால் இல்லை
25 வருடம் கழிந்தும்
என் பெயரை ஞாபகம் வைத்திருக்கும் என் பள்ளி ஆசிரயர் தான் அவர்.

- ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன்.

Sunday, June 12, 2011

சுவடுகள்

இரண்டு வித நண்பர்களின் கால் சுவடுகள்
இப்படிதான் இருக்க வேண்டும் என்பதற்கும்
இப்படி எல்லாம் இருக்க கூடாது என்பதற்கும்
இரண்டாமவனை பிடி தளர்த்தி நண்பர்களின்
இறுதிப் பட்டியலிருந்து நீக்கி
இறுதி சடங்கேற்றுக...!

Friday, May 21, 2010

நாங்கள் யார் ?

அணுகுண்டு சத்தத்தில் தினமும் கண்விழிப்பு

அப்பாவி இளைஞர்கள் சித்திரவதை சிகரத்தில்

சகோதரிகள் கண்ணெதிரே கற்பிழக்க

பள்ளிக்கு சென்ற மழலையை பாடையில் கொண்டுவந்து

பேசாமடந்தையாக்கி அனைவரும் மரண படுக்கையில்

அவல குரலுடன் தினமும் கண்ணுறங்க

இப்படியுமாய் உயிருடன் இருக்கும் நாங்கள்

ஈழத் தமிழர்கள்....


இவன்
-நா. இரவி ஷங்கர்

Wednesday, May 12, 2010

துணை

பெண் மடிந்தவுடன் ஆண் ஒரு துணையை தேடுகிறான்
ஆனால்...
ஆண் மடிந்தவுடன் பெண் இறந்து அவன் துணையை தேடுகிறாள்

எதற்காக?

அவனில்லாத உலகில் வாழப் பிடிக்காமலா?

இல்லையேல்...

அங்கும் அவன் நிம்மதியாக இருக்கக் கூடாதென்பதற்காகவா?

இவன்
-நா. இரவி ஷங்கர்.

Monday, May 3, 2010

கல்லூரி சாலை

வாலிபர்கள் கல்லூரிச் சாலையை முறைத்தபடி நின்றனர்
மகளிர் கல்லூரி நெடுவிடுமுறையையொட்டி.
சென்னை வாசிகளும் கல்லூரிச் சாலையை முறைத்தபடி நின்றனர்
வானிலை ஆராய்ச்சி நிலையத்தை நோக்கி.

பி.கு:
இந்திய வானிலை ஆராய்சிக் கழகம்
தணியும் என எச்சரித்தும் தணிந்தபாடில்லை - வெயில்.

Tuesday, April 6, 2010

எதிரி:

தினமும் அவனை கண்காணித்து
அணுபொழுதும் அவனது அசைவுகளை நோட்டமிட்டு
விருப்பு வெறுப்புகளை தெரிந்துகொண்டு
நிழலைவிட அதிக நேரம் பின்தொடர்ந்து
பார்த்த க்ஷணத்தில் தாக்க தயார்படுத்திக்கொண்டு... ... ...

இப்படி அவனைவிட அதிகமாக
அவனை தெரிந்துகொண்ட நீ,
ஏனவனை தன்மயமாக்கிக் கொள்ளாமல்
அழிக்க முனைகிறாய்?

இப்படிக்கு.
-நா. இரவி ஷங்கர்.

Monday, February 15, 2010

படித்ததில் மனதில் நின்ற வரிகள்

பள்ளியில் படித்ததில் மனதில் நின்ற வரிகள்:

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்ளென கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.

விளக்கவுரை:
முதல் வரி:
ஒரு மனிதன் மற்றொருவனிடம் யாசித்தால் (குறிப்பாக பணம்) அல்லது பிச்சை கேட்கும் பட்சத்தில், அது ஓர் இழிவான செயலாகும். அதற்க்கு அந்த மற்றொருவன் தன்னிடம் பணம் இருந்தும் இல்லையென்றால் அது அதைவிட இழிவான செயலாகும்.

இரண்டாம் வரி:
ஒரு மனிதன் மற்றொருவனுக்கு தானாக முன்வந்து அன்பளிப்பது (குறிப்பாக பணம்), ஓர் உயர்ந்த செயலாகும். அதற்க்கு அந்த மற்றொருவன் தனக்கு அது வேண்டாம் என்பது அதைவிட உயர்ந்த செயலாகும்.

பி.கு: இதில் ஏதேனும் பிழையிருப்பின் அதை மண்ணிக்கவினைகிறேன்.
பிழைதிருத்த இவ்வரிகள் எந்நூலைச் சார்ந்ததென்பதை அறியேன் (மறந்தேன்).


இவன்
-நா. இரவி ஷங்கர்.